Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தமிழ்நாடு மாறி கஞ்சா நாடு என பெயர் வந்துள்ளது – திருச்சியில் அன்புமணி ராமதாஸ் பேட்டி

திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்….. விவசாய பயன்பாட்டில் உள்ள நிலங்கள் மற்ற பயன்பாட்டிற்கான நிலமாக அதிகம் மாற்றப்பட்டுள்ளது. 48% விவசாய நிலம் தமிழகத்தில், இது தற்போது 38% மாறி உள்ளது. இதற்கு காரணம் கடந்த 50 ஆண்டுகளில் இந்த இரண்டு கட்சிகளும் பாசன வசதிக்கு எந்த திட்டமும் நீர் பாசன திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யவில்லை. நீர் பங்கீட்டில் நடுவர் மன்ற தீர்ப்பை கர்நாடகா கடைபிடிக்க வேண்டும்.

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் முத்துசாமி ( மது விலக்கு துறை ) இந்த துறைக்கு அவர் வந்தது பராவாயில்லை என்று நினைத்தேன். ஆனால் அவர் பேசுவதை பார்த்தால் பயமாக உள்ளது. மது விற்பனை துறை என்று எண்ணிக் கொண்டு வருகின்றனர். திருமணத்தில் மது விற்பனை, சந்துக்கடை விற்பனை என மது விற்பனை துறையாக தமிழக மது விலக்கு துறையாக செயல்பட்டு வருகிறது. மது விற்பனை கடந்த ஆண்டு 36 ஆயிரம் கோடி. இந்த ஆண்டு 45 ஆயிரம் கோடி.

மூட மனம் இல்லாமல் அரசு 500 கடைகளை மூடி உள்ளது. தமிழகத்தில் சந்துகடையுடன் சேர்ந்து 25 ஆயிரம் கடைகள் உள்ளது. தமிழ் நாடு என்ற பெயர் மாறி கஞ்சா நாடு என பெயர் வந்துள்ளது. கால மாற்றம், பருவ நிலை மாற்றம் மத்தியில் எதிர் காலத்தில் நாம் பெரிய நெருக்கடியில் உள்ளோம். கர்நாடகா சட்டபேரவையில் அனை கட்ட போறோம் என கூறி உள்ளனர். இது கண்டிக்கதக்கது. இரண்டு மாநில நல் உறவை கெடுக்கும் வகையில் கர்நாடகவில் உள்ள முதல்வரும், துனை முதல்வரும் தூண்டி வருகின்றனர். இது சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும்.

கூலிப்படை கலாச்சாரத்தை தமிழகத்தில் ஒழிக்க வேண்டும். காவல்துறைக்கு கஞ்சா விற்பனை பற்றி தெரியும். கஞ்சாவை யார் விற்பனை செய்கிறார்கள். எப்படி வருகிறது எல்லாம் தெரியும் காவல் துறைக்கு ஆனால் நடவடிக்கை இல்லை. இந்த தலைமுறை அழிந்து கொண்டு உள்ளது. தமிழக முதல்வர் இதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தடுப்பனை கட்டினால் மனல் அல்ல முடியாது என்பதால் இரண்டு அரசுமே தடுப்பணை கட்ட முயற்சி செய்வதில்லை. அனையும் கட்ட வில்லை. தடுப்பனையும் கட்டவில்லை. நீர் மேலாண்மைக்கு 25 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும் ஒவ்வொரு ஆண்டும், அரசு விவசாயத்தில் முதலீடு செய்ய வேண்டும். திராவிட மாடல் என்று சொன்னால் போதுமா, நீங்கள் என்ன செய்து கொண்டு உள்ளீர்கள்.

தக்காளி மற்றும் வெங்காயம் மிக பெரிய அளவில் மக்களுக்கு சுமையாக உள்ளது. மேகதாது விவகாரம் முன்கூட்டியே ஒரு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள். கர்நாடகாவில் முதல்வர் இது குறித்து பேச வேண்டும். ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. ஆளுநரும், முதல்வரும் இனைந்து செயல்பட வேண்டும். ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. நாடாளுமன்ற தேர்தல் பொறுத்த வரை எங்கள் நிலைபாட்டை நாங்கள் எடுக்கவில்லை. பாராளுமன்ற தேர்தல் பொறுத்த வரை நாங்கள் முடிவு எடுக்கவில்லை. 

தமிழகத்தில் ஆளுநர் மற்றும் தமிழக முதலமைச்சர் மோதிக்கொள்வது தமிழகத்திற்கு பலவீனம். ஆட்சியை கலைக்கவெல்லாம் முடியாது. ஆட்சியை கலைப்பது என்பது எல்லாம் அந்த காலம். நீதிமன்றம் உள்ளது. எனவே அதற்கு எல்லாம் சாத்தியம் அல்ல என தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *