திருச்சி (NIT) தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் மருத்துவ அணிகலன் கருவிகள் குறித்த 5 நாள் பயிலரங்கு துவக்க விழா இன்று நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு என்.ஐ.டி இயக்குனர் அகிலா தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக PURDUE பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜு சுந்தர்ராஜன் மற்றும் டேட்டா நெட்டிக்ஸ் சொலுயூசன்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் பாலா ஸ்ரீ ராகவன் ஆகியோர் கலந்து கொண்டு பயிலரங்கை துவக்கி வைத்தனர்.
திருச்சி என் ஐ டி கல்லூரி மற்றும் டேட்டா நெட்டிக்ஸ் சொலுயூசன்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் 5 நாள் பயிலரங்கில் மருத்துவ அணிகலன் கருவிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு திறன் (AI) குறித்தும் எதிர்கால பயன்பாடுகள், தரவு சேமிப்பு, பிரச்சனைகளுக்கான தீர்வுகள்,
புதிய நுணுக்கங்கள் ஆகியவை விவாதிக்கப்பட உள்ளன. மேலும் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்குவிக்கும் விதமாக அதனை செயல்படுத்துவதற்கான நடைமுறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
குறிப்பாக புற்றுநோயாளின் வாழ்நாட்களை நீட்டிக்கும் விதமாக நோயாளிகளின் தரவு, மருத்துவம் குறித்து மற்றும் ஆலோசனைகளை மருத்துவ அணிகலன் கருவிகள் கொண்டு செயல்படுத்துவதற்கான அடுத்த கட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
இந்நிகழ்வில் பேராசிரியர்கள் சிவகுமரன், ஸ்ரீ மூர்த்தி, பிருந்தா உள்ளிட்ட பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments