Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் 4 நாட்கள் நடைபெற்ற காவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

திருச்சி மாநகரத்தில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கான நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை முகாமில் சுமார்1102 காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் பயனடைந்தார்கள். 

திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்திய பிரியா, திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச் சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கைத் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், திருச்சி மாநகரில் பணியாற்றும் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் உடல்நலனை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி கடந்த (13.07.23)-ந்தேதி திருச்சி மாநகர ஆயுதப்படை திருமண மண்டபத்தில், காவலர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்களுக்கான பிரத்தியோகமாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தின் உதவியுடன் நடத்தபட்ட மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாமினையும், “அப்பல்லோ ஹெல்த் செக் ஆன் வீல்ஸ்” என்கிற வாகனத்தையும் காவல் ஆணையர் M.சத்திய பிரியா, தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியானது தொடர்ந்து 4 நாட்கள் மாநகர ஆயுதப்படையிலும், 2 நாட்கள்தில்லைநகர் அப்பல்லோ மருத்துவமனையிலும் நடைபெற்றது. இம்முகாமில் இதயம், நுரையீரல்,எலும்பு, கல்லீரல், கணையம், இரத்த அழுத்தம், சிறுநீரகம், ECG, ECHO, X Ray என 28 வகையான மருத்துவ பரிசோதனைகள் செய்யும் வகையில் சிறப்பு மருத்துவர்கள் மற்றும்மருத்துவ குழுக்களை கொண்டு முகாம் நடைபெற்றது.

இம்மருத்துவ முகாமில் காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் 719 நபர்களும், காவலர் குடும்ப உறுப்பினர்கள் 383 நபர்களும் என மொத்தம் 1102 நபர்கள் கலந்து கொண்டு, மருத்துவ பரிசோதனைகள் செய்தும், மருந்துவர்களிடம் ஆலோசனை பெற்று பயனடைந்தார்கள். மேலும் இம்முகாமினை ஏற்பாடு செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள். மேலும் காவல் ஆணையர், இச்சிறப்பு மருத்துவ முகாம் நடத்த உறுதுணையாக இருந்த அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திற்கு தனது நன்றியினை தெரிவித்து கொண்டார்.

இனிவரும் காலங்களிலும் திருச்சி மாநகரில் இதுபோன்று பல்வேறு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, காவல்துறையினரின் உடல்நலன் பேனும் வகையில் நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *