திருச்சியில் போக்குவரத்து நெரிசல் காலை வேளையில் அதிகமாக காணப்பட்டு வரும். காலை 8 மணிமுதல் 10 மணிவரை வேலைக்கு செல்பவர்கள், அலுவலர்களுக்கு செல்பவர்கள் என சாலைகளில் கூட்ட நெரிசல் காணப்பட்டு வரும்.
Advertisement
இந்நிலையில் திருச்சி தலைமை தபால் நிலையத்தில் இருந்து கோர்ட் எம்ஜிஆர் சிலை வரை உள்ள சாலையில் இருசக்கர வாகனங்களுக்கு தனி வழியும், அதில் போக்குவரத்து நெரிசலும் தற்போது காணப்பட்டு வருகிறது. இதனால் கோர்ட் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை பக்கத்தில் முன்னால் சென்ற கார் திடீரென நின்றால் அடுத்தடுத்து மூன்று கார்கள் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் மூன்று கார்களில் முன்புற மற்றும் பின்புற பக்கவாடுகள் சேதமானது. போக்குவரத்து போலீசார் உடனடியாக விரைந்து வாகனங்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். வாகனங்களை ஓட்டி வந்தவர்களுக்கு காயம் ஏதும் இல்லாமல் தப்பினர்.
Advertisement
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
Comments