திருச்சி பீமநகர் பண்டரினாதபுரம் ஹாஜி முகமது உசேன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் அப்சல் கான் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.
அப்சல் கான் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு இந்த வீட்டிற்கு வாடகைக்கு குடிவந்துள்ளார். தஞ்சை மாவட்டம் திருபுவனம் தூண்டில் விநாயகம் பேட்டையை சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் என்பவர் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த கொலை வழக்கு தொடர்பான இரண்டு சாட்சிகளுடன் தேசிய புலனாய்வு முகமை ஆய்வாளர் ரஞ்சித் சிங் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவினர் திருச்சி பீமநகர் பகுதியில் உள்ள அப்சல் கான் என்பவரிடம் விசாரணயில் ஈடுபட்டுள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments