Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து தெற்கு மாவட்ட திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்

மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த வன்கொடுமை நிகழ்வை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி மகளிர் தொண்டரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். தாய்மையை நிர்வாணப்படுத்தித், ஏழை எளிய, சிறுபான்மை மக்கள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலை உருவாக்கி இந்தியாவை உலக அரங்கில் தலைகுனிய வைத்த மணிப்பூர் கொடூரத்தை தடுக்கத் தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்ருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் படி திருச்சி தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி சார்பில் மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த வன்கொடுமை நிகழ்வுகளுக்கு நடவடிக்கை எடுக்காத

மத்திய பாஜக அரசே கண்டித்து திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் அருகே மாவட்ட மாவட்ட மகளிர் அணி செயலாளர் பொற்கொடி தலைமையில் வரவேற்புரை மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் ரம்யாபேகம் நன்றியுரை மாநகர அமைப்பாளர் சிந்துஜா ஆகியோர் ஆற்றினர்

இதில் 1000க்கு மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு மணிப்பூர் கலவரத்தை நிறுத்தவும், பெண்களு பாலியல் தொல்லை கொடுத்தவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், மணிப்பூர் முதல்வர் பதவி விலக வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் மாநில இணை செய்தி தொடர்பாளர் கவிஞர் சல்மா, 

மாவட்டக் கழக துணைச் செயலாளர் லீலாவேலு, மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் கயல்விழி, மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் லதா மலர்விழி, பூமிநாதேவி ரதி தேக்கமலர் ஞானதீபம் மரிய மேரிகிளாரா சீலா லாரன்ஸ் செல்வி லதா மாநகர மற்றும் மகளிர் அணி மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மகளிர் அணியினர் பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *