Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

காவலர்களுக்கான அவசரகாலத்தில் உதவும் மருந்துகள் மற்றும் மாத்திரைகள் வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம்

கடந்த (17.06.23)-ந் தேதி திருச்சி மாநகர காவல் ஆணையர் ஏற்பாட்டின்படி காவேரி பல்நோக்கு மருத்துவமனை சார்பாக மொராய்சிட்டியில் நடத்தபட்ட “இதயம் காப்போம்” என்ற நிகழ்ச்சியில் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் தங்களது இதயத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியும், மாரடைப்பு அறிகுறி ஏற்படும்போது எடுத்துக்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை தடுப்பு மாத்திரைகள் எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும் எனவும் அந்த மாத்திரைகளை மாநகர காவல்துறையினருக்கும் இலவசமாக வழங்குகிறோம் எனவும் தெரிவித்தார்.

அதன்படி, இன்று(24.07.23)-ந்தேதி திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில், மாரடைப்பு (Heart Attack) அறிகுறி தோன்றும்போது மருத்துவமனைக்கு செல்லும் வரை உள்ள நேரத்திற்குள் உயிருக்கு ஆபத்தின்றி உதவிடும் மாத்திரைகளை காவலர்களுக்கு காவேரி பல்நோக்கு மருத்துவமனை நிர்வாகத்தின் உதவியுடன் வழங்கும் முகாமினை திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்திய பிரியா, தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் பேசுகையில், காவல்துறையில் பணியாற்றும் காவல்துறையினர் 24 மணி நேரமும் பணியாற்றுவதால் காவல் ஆளினர்கள் தங்களது உடல்நலத்தை சரிவர பேணிகாப்பதில்லை எனவும், இதனால் அவர்களது உடல்நலன் பாதிக்கபடுகிறது எனவும், எனவே இந்த மாத்திரைகளை எப்போதும் உடன் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும், மருத்துவர்கள் விளக்கிய மாரடைப்பிற்கான அறிகுறி ஏற்படும்போது, இந்த மாத்திரகளை எடுத்துக்கொண்டும் அவ்வாறு எடுத்துக்கொண்ட பின்னர் தங்களுக்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்து மருத்துவமனை செல்லும் வரை தங்களது இன்னுயிரை காத்துக்கொள்ள வேண்டும் எனவும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் உடல்நலத்தை பேனுவதில் அக்கறை செலுத்த வேண்டும் என அறிவுரை வழங்கினார்கள்.

மேலும் இம்முகாமில் காவேரி பல்நோக்கு மருத்துவமனை சார்பாக அதன் நிர்வாக இயக்குனர் Dr.T.செந்தில்குமார் அவர்கள் பேசுகையில் அவசர காலத்தில் உதவும் மருந்து மற்றும் மாத்திரைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த அறிவுரைகளை வழங்கினார்கள். இதில் Dr.ஆன்ட்ருஸ் மற்றும் Dr.மாதவன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இம்முகாமில், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு, மாநகர ஆயுதப்படை கூடுதல் துணை ஆணையர், காவல் சரக உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள், சட்டம் & ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் ஆயுதப்படை ஆளிநர்கள் உட்பட 500 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டு உயிர் காக்கும் மருந்துகளை பெற்றுக்கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து மருந்துகளை இலவசமாக பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்த திருச்சி மாநகர காவல் ஆணையருக்கு தங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டார்கள். மேலும் காவல் ஆணையர் அவர்கள் இந்த மருத்துகளை இலவசமாக வழங்கிய காவேரி பல்நோக்கு மருத்துவமனை நிர்வாகத்திற்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள்.

இனிவரும் காலங்களிலும் திருச்சி மாநகரில் இதுபோன்று பல்வேறு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, காவல்துறையினரின் உடல்நலன் பேனும் வகையில் நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *