துவரங்குறிச்சி அருகே நள்ளிரவு மின் கம்பி அறுந்து விழுந்ததில் வாட்டர்போர்டு டேங்க் ஆப்ரேட்டர் மற்றும் பசுமாடு சம்பவ இடத்திலேயே தீயில் கருகி பலி.
திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் கண்ணுக்குழி பகுதியில் ராமு என்பவர் வசித்து வருகிறார்.இவர் வீட்டைச் சுற்றி பாதுகாப்பிற்காக இரும்பு வேலி அமைத்துள்ளார். இவரின் வீட்டின் அருகில் செல்லும் உயர் மின்னழுத்த கம்பி அருந்து இரும்பு வேலியில் விழுந்துள்ளது.உயர் மின்னழுத்த கம்பி என்பதால்
வீட்டின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த விறகு பட்டறையில் தீ பற்றியுள்ளது. அப்பொழுது அவரது வீட்டின் அருகே வசிக்கும் பழனிச்சாமி 54 (கோவில்பூசாரி) அப்பகுதியின் வாட்டர் டேங்க் ஆப்ரேட்டராகவும்பணியாற்றி இருந்து வருகிறார். இவர் தீயை அணைக்க சென்ற நிலையில் அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் அவர் அங்கேயே தீயில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதில் அவரது தலை மற்றும் கை கால் முற்றிலும் எரிந்த நிலையில் கிடந்தது. மேலும் ராமு வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த பசு மாட்டின் மீதும் மின்சாரம் பாய்ந்து நிலையில் தீ காயம் அடைந்து இடத்திலேயே பரிதாபமாக பலியானது.
இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்த வளநாடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்சாரம் பாய்ந்து இறந்த பழனிச்சாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மின்சார வாரியத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று மின்கம்பம் சரி செய்யும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி சோகத்தில் மூழ்கியுள்ளது.
# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
Comments