திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திறந்த வெளிப்பகுதியில் கடந்த மே மாதம் 14ஆம் தேதி நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் தலைமையில் தமிழக அரசின் ஈராண்டு சாதனை விளக்க கூட்ட நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு தேவையான தற்காலிக விழா பந்தல் மேடை,
முக்கிய பிரமுகர்களுக்கான இருக்கைகள், பயனாளிகளுக்கான இருக்கைகள், அரசு அலுவலர்களுக்கான இருக்கைகள், மேசை மற்றும் இதர பணிகளை அமைத்துத் தருமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் செயல்முறை கீழ் ஆணையிடப்பட்டதன் அடிப்படையில் ரூபாய் 56.80 லட்சத்திற்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மேற்கண்ட பணியின்
அவசரம் கருதி தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி விதிகள் படி பணி மேற்கொள்ளப்பட்டதாக பொருளில் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், பந்தல் அமைத்து நடத்தப்பட்ட விழாவிற்காகவா இத்தனை லட்சம் செலவு என மாமன்ற உறுப்பினர்கள் பொருளை நிறுத்தி வைக்குமாறு கேட்டனர்.
ஆனால் விவாதமின்றி பொருள் நிறைவேற்றப்பட்டதால் மாமன்ற உறுப்பினர்கள் முத்து செல்வம் (57 வது வார்டு), ராமதாஸ் (55 வது வார்டு) மற்றும் அமமுக மாமன்றஉறுப்பினர் செந்தில்நாதன் (47 வது வார்டு) ஆகியோர் மாமன்ற கூட்டம் நிறைவடைந்த நிலையிலும் அந்த அரங்கில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments