Site Logo mobile
Search Icon
Mobile Gif
Jobs

Health Inspector-II பதவிக்கு விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

Health Inspector-II பதவிக்கு விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் வாயிலாக, Health Inspector-II பதவிக்கு முன்னாள் படைவீரர்களுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி உயிரியல் அல்லது தாவரவியல் ஆகியவற்றில் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பில் தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொது சுகாதார இயக்குநரால் வழங்கப்பட்ட இரண்டு வருட பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) படிப்பு சுகாதார ஆய்வாளர் & சுகாதார ஆய்வாளர் பாட நெறி சான்றிதழ் மற்றும் தடுப்பு மருத்துவம் பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் www.mrb.tn.gov.in என்ற இணைய தளத்தில் (31-07-2023)-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பெயன்பெறலாம்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *