விசுவ ஹிந்து பரிஷத் தென் தமிழ்நாட்டின் பெண்கள் பிரிவான மாத்ரு சக்தி, திருச்சிராப்பள்ளி கடந்த 10 வருடங்களாக காவிரி தாய்க்கு ஆடி 18 அன்று சீர் கொடுக்கும் நிகழ்ச்சியை வெகு விமர்சையாக நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஆடி பெருக்கு அன்று ஶ்ரீரங்கம், காவிரி ஆற்றங்கரை, அம்மா மண்டபத்தில் பெருந்திரளான பொதுமக்கள் மற்றும் மாத்ருசக்தி, துர்கா வாகினி, விசுவ ஹிந்து பரிசத், பஜ்ரங்தள் போன்ற அமைப்புகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள், நவதானியங்கள், பட்டுப் புடவை, ஆபரணங்கள் போன்றவற்றை நமக்கு வாழ்வளிக்கும் காவிரித் தாய்க்கு சமர்ப்பிக்கும் நிகழ்வாக சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments