Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி ரயில்வே கோட்டத்தில் 4 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டம் பிரதமர் மோடி அடிக்கல் – திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் பேட்டி

திருச்சி ரயில்வே கோட்டத்தில் 4 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டம் பிரதமர் மோடி அடிக்கல் – திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் பேட்டி

திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது…

இந்தியாவை நவீன மயமாக்குவதிலும், ரயில்வே துறையை நவீனமயமாக்குவதிலும் மத்திய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே மத்திய பிரதேசம், பெங்களூர், குஜராத் ஆகிய மூன்று பகுதிகளில் உள்ள ரயில் நிலையம் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் 1039 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட உள்ளன. திருச்சி கோட்டத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, மன்னார்குடி, சிதம்பரம், அரியலூர், விருதாச்சலம் உள்ளிட்ட 15 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட உள்ளன. பாண்டிச்சேரி ரயில் நிலையம் மற்றொரு திட்டத்திற்கு நவீனமயமாக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார். திருச்சி கோட்டத்தில் முதல் கட்டமாக தஞ்சாவூர் விழுப்புரம், மயிலாடுதுறை மற்றும் பாண்டிச்சேரி ரயில் நிலையங்கள் நவீனமயமாக்குதற்கான அடிக்கல் நாட்டுகிறார். இந்த திட்டத்தில் கட்டிடங்களை மறு வடிவமைப்பு செய்தல், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், நவீன வசதிகள், பயணிகளுக்கான வழிகாட்டு படம், கலாச்சாரத்தை மையப்படுத்தி கட்டிட வடிவமைப்பு உள்ளிட்டவை அதில் மேற்கொள்ளப்படும்.

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் திருச்சி கோட்டத்தில் 15 ரயில் நிலையங்களை நவீனமயம் ஆக்குவதற்கு ரூ.123 கோடியும் மற்றொரு திட்டத்தில் பாண்டிச்சேரி ரயில் நிலையத்திற்கு மட்டும் ரூ.93 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டங்கள் தொடங்கப்பட்டு ஆறு முதல் ஏழு மாதத்திற்குள் அவை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *