திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 5 மண்டலங்களிலும் உள்ள மாநகராட்சி வார்டுகளில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க தமிழ்நாடு நகர்புற சாலைகள் சீரமைப்பு திட்டம் (TURIP) 2023-2024 ன் கீழ் மேற்கொள்ள (30.06.2023)ல் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் ரூ.104 கோடிக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில்
செப்டம்பர் 15 பருவமழை தொடங்குவதற்கு முன்பாக பணிகளைத் துவங்கி முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதாள சாக்கடை குடிநீர் முன்னேற்ற பணிகளுக்காக தோண்டி பணிகள் முடித்து மூடப்பட்ட தெரு சாலைகள் மேடு பள்ளமாக உள்ள நிலையில் பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
பணிகள் முடிக்கப்பட்ட சாலைகளை சீரமைப்பு பணிகளை உடனடியாக துவக்கி பருவமழை காலத்திற்கு முன்னதாக முடிக்க வேண்டுமாய் கேட்டுக்கொண்டு மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மனு அளிக்கப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments