கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க மருத்துவர் அணி மற்றும் அப்பல்லோ மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் ஞாயிறு 06/08/23 திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், இந்திரா காந்தி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றத அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, குத்துவிளக்கேற்றி இந்நிகழ்வை துவக்கி வைத்தார் நிகழ்வில் மருத்துவ அணி மாநில செயலாளர் எழிலன் நாகநாதன் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்
திருச்சி தெற்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி மாவட்ட தலைவர் டாக்டர் தமிழரசன், மாவட்ட அமைப்பாளர் டாக்டர் சுரேஷ் பாபு, டாக்டர்கள் பால்வண்ணன், முகமது மன்சூர்,சந்தோஷ் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாட்டில் நடைபெற்றது.
முகாமில் ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு,
ஹீமோகுளோபின் ரத்த அளவு சரிபார்த்தல், இ.சி.ஜி,எக்கோ கார்டியோ கிராம்,நுரையீரல் PFT சோதனை, LIVER FIBRO Scan,Bone Mineral Dencity உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டது
இம்முகாமில் பொதுமக்கள் பங்கேற்றனர் முகாமினை தொடர்ந்து முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் மருத்துவத் துறைக்கு ஆற்றிய சேவைகளும் சாதனைகளும் குறித்த ஆங்கில கருத்தரங்கம் நடைபெற்றது இக்கருத்தரங்கையும் மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் துவக்கி வைத்தார் இந்த கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக டாக்டர் எழிலன் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
Comments