திருச்சி குண்டூர் அடுத்த பர்மா காலனியில் 2 வயது குழந்தையின் தொண்டைப் பகுதியில் பொருள் சிக்கி குழந்தையின் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது.
திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்த பொழுது குழந்தை ஊக்கினை (safety Pin) விழுங்கி உள்ளது தெரிய வந்துள்ளது. ஊக்கு திறந்த நிலையில் குழந்தையின் தொண்டை பகுதியில் சிக்கியிருந்தது.
தொடர்ந்து ENT 3 மருத்துவர்கள் குழந்தையின் தொண்டை பகுதியில் சிக்கியிருந்த ஊக்கினை 30 நிமிடத்தில் வெளியே மிக சதுர்யமாக எடுத்தனர். தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாக திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments