திருச்சி மாவட்டம் நாகமங்கலத்தை சேர்ந்த தினேஷ் என்ற வாலிபர் தான் விரும்பிய பெண்ணை (17 வயது பெண்) திருமணம் செய்து வைக்க சொல்லி நாகமங்கலம் பஞ்சாயத்து அலுவலகம் அருகே உள்ள பயன்பாட்டில் இல்லாத ஏர்செல் டவரில் ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார்.
இதுக்குறித்து கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் விரைந்து வந்த மணிகண்டம் போலீசார் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments