திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு 30க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் விடுதி காப்பாளர் விடுதியில் சேருவதற்காக கல்லூரி மாணவர்களிடம் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டி விடுதி முன்பாக அமர்ந்து முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பின்னர் ஊர்வலமாக வந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.உடனடியாக காப்பாளரை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.
மேலும் விடுதியில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக குறிப்பிட்டு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு இந்திய மாணவர் சங்க அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments