திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வைரிசெட்டிப்பாளையம் ஊராட்சியில் அமைந்துள்ளது ஏரிக்காடு. இங்கு வசிப்பவர் ராஜேஸ் (35). இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு திருமணம் ஆகி ரேவதி என்கின்ற மனைவியும் தன்யாஶ்ரீ (9), கீர்த்தி(2) என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ராஜேஷ் வழக்கம் போல் லாரிக்கு பணிக்கு சென்று விட்டார். அதனை தொடர்ந்து வீட்டில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் ஆகிய மூவரும் நேற்றிரவு ஓட்டு வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது நள்ளிரவில் ஓடுகள் முறியும் சப்தம் கேட்டுள்ளது. இதனை அடுத்து அலறியடித்தபடி ரேவதி தனது குழந்தைகள் இருவரையும் அழைத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறினார். அப்பொழுது கண் இமைக்கும் நேரத்தில் வீட்டின் மேற்கூரை முற்றிலும் இடிந்து விழுந்தது.
இதில் வீட்டிலிருந்த பிரிட்ஜ், ஏர்கூலர், பாத்திரங்கள் முற்றிலும் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக ரேவதி மற்றும் குழந்தைகள் உள்பட மூவரும் காயம் இன்றி உயிர் தப்பினர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments