Saturday, August 16, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

எஸ்.ஆர்.எம் டி .ஆர். பி கல்லூரியின் எட்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா

திருச்சி எஸ். ஆர். எம்.டி.ஆர். பி.கல்லூரியின் எட்டாம் ஆண்டு பட்டமளிப்புவிழா 12 ஆகஸ்ட் 2023 அன்று நடைபெற்றது. விழாவானது பிரமாண்டமானமற்றும் கம்பீரமான கல்வி ஊர்வலத்துடன் தொடங்கியது.

இப்பட்டமளிப்பு விழாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 472பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம்பெற்றவர்களுக்கு முதலில் விருதுகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்துஅனைத்து மாணவர்களுக்கும் பட்டமளிக்கப்பட்டது. 

திருச்சி மற்றும் ராமாபுரம் வளாக இயக்குநர் டாக்டர்.ஆர்.சிவக்குமார், பட்டமளிப்பு விழாவைத் துவங்கி வைத்து, தனது தலைமை உரையில் அனைத்து பட்டதாரிகளை வாழ்த்தி மாணவர்கள் மாற்றத்தைத் தழுவி, எதிர்கால இந்தியாவின் தூண்களாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

இவ்விழாவிற்கு தலைமை விருந்தினராக தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர். ஜி. அகிலா கலந்து கொண்டு பட்டமளிப்பு சிறப்புரையாற்றி பட்டங்கள் மற்றும் விருதுகளை வழங்கினார். அவர் தனது சிறப்புரையில், பட்டம் பெறும் மாணவர்கள் சமூக உணர்வு மற்றும் தொழில் ரீதியாக நமது நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தினார். பட்டதாரிகள் நேரத்தை கடைபிடிப்பது. அவர்களின் ஆர்வத்திற்கு மதிப்பளிப்பது, உலகை வாழச் சிறந்த இடமாக மாற்ற சுய ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

கல்லூரி முதல்வர் டாக்டர் பி.கணேஷ்பாபு அவர்கள் வரவேற்புரை வழங்கினார். அவ்வுரையில் மாணவர்கள் மற்றும் நிறுவனம் பற்றிய முன்னேற்றம் குறித்து விளக்கினார். திருச்சி எஸ். ஆர். எம் வளாகத்தின் இயக்குநர், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நிர்வாக இயக்குநர் மற்றும் திருச்சி வளாகத்தின் துணை இயக்குநர், துணை முதல்வர்கள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் தலைமையாசிரியர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோர்

விழாவில் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்ற பட்டதாரிகள் மற்றும் பெற்றோர்களிடையே பெருமிதமும் சாதனை உணர்வும் நிறைந்திருந்தது. இந்நிகழ்வானது வருங்கால பட்டதாரிகளுக்கு உத்வேகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

விழாவானது திருச்சி மற்றும் ராமாபுரம் வளாக இயக்குநர் அவர்களால் நிறைவு செய்யப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. எஸ். ஆர். எம். டி. ஆர். பி. பணியாளர்களின் ஒத்துழைப்போடு, பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவின் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சுவையான பிரமாண்ட விருந்து  வழங்கப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *