திருச்சியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசியக் கொடியை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஏற்றி வைத்து 157 பயனாளிகளுக்கு 1 கோடியே 62 லட்சத்து 81ஆயிரத்து 677 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
நாட்டின் 77வது சுதந்திர தின விழா திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, வண்ண பலூன்களை பறக்க விட்டார். இதனைத்தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பினரை பார்வையிட்ட பின்பு அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.
25 ஆண்டுகள் மாசற்று சிறப்பாக பணியாற்றி வரும் வருவாய்த்துறை, மருத்துவத்துறை,சுகாதாரத்துறை,மாநகராட்சி பணியாளர்கள் 445 பேரை பாராட்டி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் சான்றிதழ் வழங்கினார்.
பல்வேறு துறையை சார்ந்த 157 பயனாளிகளுக்கு 1 கோடியே 62 லட்சத்து 81ஆயிரத்து 677 மதிப்பில் நலத்திட்டஉதவிகள் வழங்கினார்.
300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகளுடன் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments