செப்டம்பர் -18ம் தேதி விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கொண்டாப்பட உள்ளது. இந்து முன்னணி திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் செப்டம்பர் -18ம் தேதி திருச்சி மாநகரில் 500 இடங்களில் விநாயகர் திருமேனி வைக்கப்பட உள்ளது. அன்றை தினம் விநாயகர் திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்து பின்னர் ஆகஸ்ட் -20ஆம் தேதி விசர்ஜனம் ஊர்வலம் செய்யப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் திருச்சி கோட்ட செயலாளர் போஜராஜன் துவக்கவுரை ஆற்றினார். மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட பொதுச் செயலாளர் மனோஜ்குமார் முன்னிலை வகித்தார். மேலும் விநாயகர் சதுர்த்தி கமிட்டியினர் அதிக அளவில் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments