Site Logo mobile
Search Icon
Mobile Gif
Business

ஒரே வருடத்தில் ரூபாய் 1 லட்சம் ரூபாய் 9 லட்சமாக மாறியது 900 சதவிகித வருமானம்!!

உலகளாவிய ஃபின்டெக் நிறுவனமான Spacenet Enterprises India Ltd எனப்படும் மல்டிபேக்கரில் ஒருவர் முதலீடு செய்திருந்தால், இது 900 சதவிகிதத்தை வாரி வழங்கியிருக்கும், தொழில்நுட்ப பங்குகள் பங்குச் சந்தைகளின் செல்லப்பிள்ளைகள் ஸ்பேஸ்நெட் இப்போது இரண்டு காரணங்களால் மக்களின் கண்காணிப்பில் வந்துவிட்டது.

ஸ்பேஸ்நெட்டின் பங்கு விலை சுமார் ரூபாய் 2 இருந்து பங்கு ஒன்றுக்கு தற்பொழுது 23.85 ஆக உயர்ந்து பங்குகளின் செயல்திறன் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இதன் விற்பனை ரூபாய் 22 கோடி மற்றும் இது EBIT கிட்டத்தட்ட 2360 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடன் இல்லாத நிறுவனமாக இருப்பதால், அதன் லாபம் 700 சதவிகிதம் உயர்ந்துள்ளது மற்றும் EPS 400 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்தகால செயல்திறனின் இந்த உறுதியான அடித்தளமும், கீழே குறிப்பிடப்பட்டுள்ள நம்பிக்கைக்குரிய எதிர்காலத் திட்டங்களும் இதை கவனிக்க வேண்டிய ஒரு பங்காக ஆக்குகின்றன.

(12-08-2023) அன்று, இந்நிறுவனம் தேசிய பங்குச் சந்தையில் (NSE) முன்னுரிமை வெளியீடு மூலம் 100 கோடிகளை திரட்டும் எண்ணம் குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டது, அதற்கு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. ஃபின்டெக், நியோ பேங்க், ஏஐ, ப்ராப்டெக் மற்றும் கேம்ஃபை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வளர்ந்து வரும் ஐந்து புதிய யுக தொழில்நுட்ப நிறுவனங்களில் அதன் முதலீடுகளுக்கு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

புதிய யுக தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்த முதலீடுகள் Spacenetன் பங்குதாரர்களுக்கு கணிசமான மதிப்பை கொண்டிருக்கும். இவ்வாண்டின் 52 வார குறைந்த பட்ச விலையாக ரூபாய் 13.50 பைசாவில் இருந்து நேற்று 23.85 ஆக உயர்ந்துள்ளது, இதன் 52 வார உட்சபட்ச விலையாக ரூபாய் 31.55 ஆக இருந்தது.

(Disclaimer : கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே பரிந்துரை அல்ல. உங்கள் முதலீட்டு ஆலோசகரை கலந்து ஆலோசித்து முடிவெடுக்கவும்.)

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *