முன்னாள் முதல்வர், பிஜேபி தலைவர் பசவராஜ் பொம்மை, காவிரியில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது, மீறி திறந்தால் போராட்டம் நடத்துவோம் என்று கூறியிருப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிப்பது மட்டும் இல்லாமல், தண்ணீர் இல்லாமல் தமிழகத்தை பாலைவனமாக மாற்றவேண்டும் என்ற எண்ணத்தில் சொல்லியிருப்பது,
காவிரியில் தண்ணீர் திறந்து விட உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், இவ்வாறு சொல்லியிருப்பது உச்ச நீதிமன்றம் உத்தரவு பெரிதா..? அல்லது பசவராஜ் பொம்மை சொல்லியிருக்கும் வார்த்தை பெரிதா..? என்பதை கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான
விவசாயிகள் (18.08.2023) வெள்ளிக்கிழமை இன்று திருச்சி மாவட்டம் முக்கொம்பு காவிரி ஆற்றில் நடுப்பகுதியில் இறங்கியும், மணலில் கழுத்துவரை புதைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments