Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் திமுக உண்ணாவிரதத்தில் எம்.எல்.ஏ ஆப்சென்ட் – 3 பேர் எஸ்கேப் – பிரியாணி கடைக்கு லீவு

ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை பறிக்கும் நீட் தேர்வை கண்டித்தும், நீட் தேர்வு ரத்து செய்ய மறுக்கும் தமிழக ஆளுநரை கண்டித்தும் இன்றைய தினம் தமிழக முழுவதும் திமுக இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவரணி சார்பில் உண்ணாவிரத அறப்போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் நீட்டுக்கு எதிராக திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரில் நடைபெற்றுவரும் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க திமுகவினரின் உண்ணாவிரத போராட்டத்தின் எதிரொலியாக உண்ணாவிரதம் நடைபெறும் இடத்திற்கு எதிரே செயல்பட்டு வந்த பிரபல திண்டுக்கல் பிரியாணி, மற்றும் சைவ உணவுகள் அனைத்தையும் திமுகவினர் மிரட்டலின் காரணமாக இன்று ஒரு நாள் பூட்டிவிட்டு, கடைக்கு விடுமுறை அளித்துவிட்டு சென்றுள்ளனர். 

திமுகவினரையும் பிரியாணியையும் பிரிக்க முடியாது என்பதனால், அதே நேரம் உண்ணாவிரதத்திற்கு வந்த திமுகவினர் ஆங்காங்கே பிரியாணி கடைகளில் உணவருந்த சென்று விடுவார்கள் என்பதனால் உணவுகள் மற்றும் பிரியாணி கடைகளை மூட சொல்லியதாகவும் திமுகவினர் தெரிவிக்கின்றனர்.

இது ஒருபுறம் இருக்க திருச்சியில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் மன்னச்சநல்லூர் திமுக எம்எல்ஏ கதிரவன் போராட்டத்தில் முழுவதுமாக கலந்து கொள்ளாமல் வந்துவிட்டு உடனடியாக ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்துவிட்டு நடைபெற்றது திமுகவினர் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது, இதேபோன்று திமுக சார்பில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இனிக்கோ இருதயராஜ் எம்எல்ஏ இந்த உண்ணாவிரத போராட்டத்தின் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ பழனியாண்டி, மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன்,லால்குடி எம்எல்ஏ சௌந்தர பாண்டியன் கலந்து கொண்டு விட்டு சிறிது நேரத்தில் புறப்பட்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *