Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

வருங்கால முதல்வரை அமைச்சர் நேரு அழைத்து வந்திருக்கிறார் – திருச்சியில் அமைச்சர் மகேஸ் பேச்சு

திருச்சி சிங்காரத் தோப்பு பகுதியிலுள்ள தனியார் (ஹோலிகிராஸ்) கல்லூரியில் 100ம் ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சியில் இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் பேசும்போது…. விளையாட்டு துறை அமைச்சர் பம்பரம் போல் சுழன்று சுழன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்களுக்கு மைதானம் அமைத்துக் கொடுத்தவர் உதயநிதி ஸ்டாலின் என்றார்.

இதனை தொடர்ந்து பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சும்போது… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீட் அறப்போராட்டத்தில் பேசிய பிறகு நேற்று முதல் செயலாளராக இருந்தவர் இன்று முதல் தலைவராக தெரிகிறார். 2020 ஒலிம்பிக்கில் 45% கலந்து கொண்டனர். இனி அடுத்து வரும் ஒலிம்பிக்கில் இதைவிட அதிகமான சதவீதம் பேர் பங்கேற்பார்கள்.

தன்னம்பிக்கை அதிகம் யாருக்கு இருப்பது என்றால் பெண்களுக்கு மட்டும் தான். தற்போது முதலமைச்சரை வரவில்லை என்றாலும், வருங்கால முதலமைச்சரை கே.என்.நேரு இன்றைக்கு அழைத்து வந்திருக்கிறார் என்றார்.

இதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு பேசும்போது…. கிருத்துவ சமுதாய பெருமக்கள் தான் திருச்சியின் வளர்ச்சிக்கு முக்கிய அங்கமாக இருக்கிறார்கள். உதயநிதி ஸ்டாலின் திருச்சிக்கு போறியா நல்லபடியாக போயிட்டு வா என்று வாழ்த்தி அனுப்பியவர் முதல்வர் தளபதி ஸ்டாலின் என்றார்.

தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர் இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது… விளையாட்டு விழா என அழைத்து வந்து கலை நிகழ்ச்சி விழாவாக நடைபெற்றது.எனக்கு திருப்பி கல்லூரி நாட்கள் ஞாபகம் வந்துவிட்டது. தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவல் பிரிவு உருவாக்கியவர் தலைவர் கலைஞர். தமிழகத்தில் பல மேயர்கள், கவுன்சிலர்கள் இருக்கிறார் என்றால் அது கலைஞர் கொண்டு வந்த திட்டம். மகளிர் இலவச பேருந்து மூலம் ஒரு பெண் ஆயிரம் ரூபாய் சேமிக்கிறார்கள். இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம் என பல்வேறு திட்டங்கள் மகளிர் பங்களிப்பால் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

விளையாட்டை ஒரு இயக்கமாக நடத்தி வருகிறோம். அடுத்த மாதம் சைக்கில்தான், ஃபார்முலா 4 என்ற போட்டி முதலமைச்சர் உத்தரவின் பேரில் நடக்க உள்ளோம். முன்பெல்லாம் விளையாட்டு என்றால் மணிப்பூர், ஹரியானவை என்று சொல்லுவோம். விளையாட்டுத்துறை என்றாலே தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்கி உள்ளோம். தைரியமாகவும், தன்னம்பிக்கையோடும் விளையாட்டு போட்டியில் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என பேசினார்.

முன்னதாக மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சியும், மல்லர் கம்பத்தில் யோகா நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியை 700 மேற்பட்ட பெண்கள், ஆசிரியர்கள் கண்டு ரசித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *