ஓய்வு பெற்ற காவல்துறைத்தலைவர் சைலேந்திரபாபுவை டி.என்.பி.எஸ்.சி தலைவராக தமிழக அரசு நியமனம் செய்து ஆளுநருக்கு கோப்பை அனுப்பி வைத்திருந்தது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளார்.
தலைவர் நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டல்கள் பின்பற்றப்படவில்லை என காரணம் சொல்லப்பட்டு இருப்பதாக ராஜ்பவன் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பல்வேறு வகையில் ஆளுநருக்கும் அரசுக்கும் கருத்து மோதல்கள் நிலவி வரும் சூழ்நிலையில்
கோப்பை ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளது புதிய விவாதத்திற்கு வழி வகுத்துள்ளதுடன் தான் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல என ஆளுநர் ரவி அதிரடி காட்டி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments