கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சியில் நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிய மற்றும் பெரிய மாடுகள் கலந்து கொண்ட மாட்டு வண்டி பந்தயம் மாவட்ட பொருளாளர் குணசேகரன் தலைமையில் இன்று (23.08.2023) நடைபெற்றது. இப்போட்டியினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, உட்பட 7 மாவட்டங்களிலிருந்து மாட்டு வண்டி பந்தைய வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டி துவரங்குறிச்சி பாலத்தில் இருந்து 7 கி.மீ தூரம் வரை சென்று திரும்பும் முதல் வண்டிக்கு முதல் பரிசு 50,000 மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.
இதில் பெரிய மாட்டு வண்டி – 13 வண்டி மாடுகள் கலந்து கொண்டன. சிறிய மாட்டு வண்டி மாடுகள் 24 கலந்து கொண்டன. முதல் பரிசு மதுரை அவனியாபுரம் எஸ்.கே.ஆர் மோகன் சாமி குமார் – 50,000 ரூபாய், இரண்டாம் பரிசு மதுரை கீழவளவு சேர்ந்தசக்தி அம்பலம் 40,000,
மூன்றாம் பரிசு சிவகங்கை சின்ன மாங்குளம் அழகு நாட்டரசன் கோட்டை காவல்துறை பழனி ரூ. 30,000, நான்காம் பரிசு திருச்சி கீழையூர் ஆரிய நாராயணன் சாமி ரூ. 10,000யை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவைத்தலைவர் கோவிந்தராஜன், செங்குட்டுவன், கவிஞர் சல்மா, ஒன்றிய செயலாளர்கள் சின்ன அடைக்கன், செல்வராஜ், ராயம்பட்டி ராமசாமி, ஒன்றிய பெருந்தலைவர்கள் பழனியாண்டி, அமிர்தவல்லி ராமசாமி, சுற்றுசூழல் மாவட்ட அமைப்பாளர் கிருஷ்ண கோபால், மணப்பாறை நகர செயலாளர் மு.ம.செல்வம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments