சாலைகளில் திரியும் கால்நடைகள் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாலை பயனீட்டாளர்கள் நல அமைப்பின் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
Advertisement
திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள மாநகர சாலைகள்,மாநில/தேசிய நெடுஞ்சாலை துறை சாலைகளில், கால்நடைகள் அதிக அளவில் நடமாடுவதால் தினந்தோறும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயம்,கொடுங்காயம், மரணங்கள் எற்பட்டு வருவது கவலை அளிக்க கூடிய நிகழ்வாக உள்ளது.சாலைகளில் கால்நடைகளால் ஏற்படும் விபத்தை தவிர்க்க தமிழ்நாடு நகரங்கள் தொல்லைகள் சட்டம்1889 , கால்நடை அத்துமீறல் சட்டம் 1871 மாநகர சாலைகளில் கால்நடைகளை திரிய விடும் உரிமையாளருக்கு 5000 ஆயிரம் அபராதம் விதிக்கும் 2013 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Advertisement
மேற்கண்ட சட்டங்கள் மற்றும் தீர்மானங்களை நடைமுறைபடுத்த மாநகராட்சி அலுவலர்கள், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள்,மாநகர,
மாவட்ட காவல் துறை அலுவலர்கள், நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் இவர்களை கொண்டு சிறப்பு கூட்ட கலந்தாய்வு நிகழ்வினை ஏற்பாடு செய்து மேற்கண்ட சட்டங்களை அமல்படுத்த தகுந்த வழிமுறைகளை ஏற்படுத்தி தக்க சாலை பாதுகாப்பினை உறுதி படுத்தவும், சாலை பயனீட்டாளர்களின் நலன் காக்கவும் வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் சாலை பயனீட்டாளர்கள் நல அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
Comments