கடலூர் அகரம் ஆலம்பட்டி சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பண்ணன் (47). இவர் முசிறி பகுதியில் சேலம் புறவழிச்சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிடுவதற்காக தன்னுடன் வந்த பாக்கியராஜ், ராமராஜ், சுவாமிநாதன், சதீஷ்குமார் ஆகியோருடன் சென்றுள்ளார்.
அந்த உணவக ஊழியரிடம் புரோட்டா கொண்டு வருமாறு கூறி வெகுநேரமாக காத்திருந்தனர். அப்போது அந்த கடையின் ஊழியர் புரோட்டாவிற்கு பதிலாக ஆப்பாயில் கொண்டு வந்து கொடுத்துள்ளார். புரோட்டா கேட்டதற்கு ஆப்பாயில் வைத்திருக்கிறீர்களே என கேட்டதால் இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.
இதில் உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சரவணன், செந்தில்குமார் ஆகியோர் கட்டையாலும் கையாளும் தாக்கியதாக கூறி பாக்கியராஜ், ராமராஜ் ஆகியோர் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கருப்பண்ணன் கொடுத்த புகாரின் பேரில் முசிறி காவல்துறையினால் வழக்கு பதிவு செய்து உணவக தொழிலாளர்கள் சரவணன், மணிகண்டன், செந்தில்குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போல் முசிறி அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வரும் உணவக ஊழியர் பாலசுப்பிரமணியன் (39) தன்னை தாக்கியதாக அளித்த புகாரின் பேரில் பாக்யராஜ், ராமராஜ், சுவாமிநாதன், சதீஷ்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments