Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெற்றோர் மீது எப்ஐஆர் – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

திருச்சி மாவட்டம் மற்றும் மாநகரில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்களை கண்டறிந்து குழந்தைகள் மீட்கும் பணியை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மேற்கொண்டு உள்ளார்.

தற்பொழுது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராகுல் காந்தி தலைமையில் குழந்தைகள் நல குழுவினரும் 28 குழுக்களாக மாநகரில் சாலையோரம் குழந்தைகள் வைத்து பிச்சை எடுப்பவர்களை உடனடியாக அவர்களுடன் குழந்தைகளை மீட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள குழந்தைகள் நல குழு அலுவலகத்தில் தங்க வைத்துள்ளனர். குழந்தைகளுடன் தாய்மார்கள் பெண்களையும் அழைத்து வந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இவர்களுக்கு மறுவாழ்வு திட்டத்தின் கீழ் உதவிடவும் மேலும் வாடகை குழந்தைகளை வைத்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு. இதுவரை 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை தாய்மார்களுடன் அழைத்து வந்துள்ளனர். பின்னர் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பேட்டியளித்த போது….. திருச்சி மாவட்டத்தில் சாலையோரங்களில் குழந்தைகளை வைத்தும் பிச்சை எடுப்பவர்களை மீட்க 28 குழுக்கள் 150 பேர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், குழந்தைகள் நல குழு, காவல்துறை சேர்ந்து 150 பேர் அதிரடி மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். குழந்தைகளையும், அவர்களையும் மீட்டு குழந்தைகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்யவும், காப்பகங்களில் தங்க வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் தற்போது நடத்தி வரும் அதிரடி சோதனையில் வாடகை குழந்தைகள் எதுவும் மீட்கப்படவில்லை. வட இந்தியர்களாயினும் அவர்கள் இனி திருச்சி மாவட்டத்தில் சாலையோரங்களில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கக் கூடாது. அவர்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கல்வி கற்றலை பாதியில் நிறுத்தி குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கும் பெரியோர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அந்த குழந்தைகளுக்கு மீண்டும் கல்வி பயில மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்றார்.

குழந்தைகள் மீது வன்மத்தை புகுத்தும் பெரியோர்கள் மீதும் நடவடிக்கை (எப்.ஐ.ஆர் பதியப்படும்) எடுக்கப்படும். பொதுமக்கள் குழந்தைகள் வைத்து சாலை ஓரமாக பிச்சை எடுப்பவர்களை கண்டால் உடனடியாக 1091 என்ற உதவி மைய எண்ணிற்க்கு புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *