திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையம் வளாகத்தில் உள்ள சுமார் 14 உணவு கடைகள் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.R.ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இப்ராஹிம், பொன்ராஜ், செல்வராஜ் கொண்ட குழுவால் 14 கடைகள் ஆய்வு செய்யப்பட்டது.
அதில் இரண்டு கடைகள் மிகவும் சுகாதாரமாற்ற முறையில் இருந்தது அந்த இரண்டு கடைகளுக்கும் compound offense போடப்பட்டு அபராத தொகையாக தலா ரூபாய் 2000 விதிக்கப்பட்டு அதில் மிக மோசமாக இருந்த ஒரு உணவகம் தற்காலிகமாக உணவு தயாரிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்து கடைகளுக்கு குறைகளை சுட்டிக்காட்டி ஐந்து கடைகளுக்கு பிரிவு 55-60T கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டு குறைகளை நிவர்த்தி செய்யகால அவகாசம் கொடுக்கப்படுள்ளது.
Comments