திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்ல இருந்த பயணிடம் வான் நுண்ணறி பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர் உடமைகளில் செல்போன் சார்ஜர் மற்றும் பவர் பேங்க்களை சோதனை நடத்திய பொழுது சவுதி ரியால்களை மடித்து உள்ளே வைத்து கடத்த முயற்சி செய்தது தெரியவந்தது. அவரிடமிருந்து சவுதி அரேபியா ரியால் 50,000 பறிமுதல் செய்யப்பட்டது.
இந்திய ரூபாயில் அதன் மதிப்பு 10 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments