திருச்சி மாவட்டம் சமயபுரம் நான்கு ரோடு பகுதியை சேர்ந்த அப்பாஸ் (32). இவர் அப்பகுதியில் இருசக்கர வாகனம் உதிரி பாகங்கள் விற்பனை செய்து வருகிறார். நேற்று இரவு 10 மணிக்கு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு சென்றார்.
இன்று காலை ஆறு மணி அளவில் மின்சாரம் தடை அடிக்கடி ஏற்பட்டதில் அதிலிருந்து மின் கசிவு ஏற்பட்டு தீ கடைக்குள் பரவியது. அருகில் இருந்த வெல்டிங் பட்டறைக்கும் தீ பரவி முன்பக்கம் மட்டும் சேதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சமயபுரம் தீயணைப்பு மீட்பு முத்துக்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் நிகழ்விடத்திற்கு வந்து தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் கடையில் இருந்த கம்ப்யூட்டர், டயர்கள் ஆயில், மற்றும் கடையில் உள்ள ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து தீக்கிரையானது. இச்சம்பவம் குறித்து சமயபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments