திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் (தூய வளனார்) கல்லூரி வேதியியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் லியோ ஸ்டாண்ட்லீ. இவர் தனது கல்லூரியில் படிக்கும் மாணவிக்கும், மாணவியின் தாயாருக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஆனால் கல்லூரி நிர்வாகம் உரிய விசாரணையும், நடவடிக்கையும் எடுக்காததால், மனமுடைந்த மாணவி தற்கொலைக்கு முயன்று தீவிர சிகிச்சைக்கு பிறகு காப்பாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பாலியல் குற்றச்சாட்டு குறித்து கல்லூரி நிர்வாக விசாக கமிட்டியினர் மாணவிடம் விசாரணை நடத்தி உள்ளதாகவும், பாலியல் குற்றச்சாட்டில் உண்மை இருப்பது தெரியவந்த நிலையில், உதவி பேராசிரியர் லியோ ஸ்டாண்ட்லீ பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments