திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகரை சேர்ந்தவர் அப்துல் ஹக்கீம் (43). இவர் அந்த பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்று வருவதாக அரியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அரியமங்கலம் போலீசார் அவர் லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்தபோது கையும் களவுமாக கைது செய்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து அப்துல் ஹக்கீமை திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments