Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

விநாயகர் சதுர்த்தி விழா – காவல்துறை கடும் கட்டுப்பாடு – வெளிநடப்பு

திருச்சி மாநகர காவல் ஆணையர் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் சிலை கரைப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக காவல் அதிகாரிகள் மற்றும் விநாயகர் சிலை அமைப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில், மாநகர காவல் துணை ஆணையர்கள் தெற்கு, வடக்கு மற்றும் தலைமையிடம், அனைத்து சரக காவல் உதவி ஆணையர்கள், அனைத்து சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர்கள் மற்றும் இந்து அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் சிலை கரைப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் சுமார் 200 நபர்களுடன் நடைபெற்றது.

திருச்சி மாநகரில் வருகின்ற (18.09.2023)-ந் தேதியன்று நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழா (சிலை பிரதிஷ்டை) மற்றும் (20.09.2023)-ந் தேதி நடைபெற உள்ள சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது பிரச்சனைக்குரிய இடங்கள் கண்டறியப்பட்டும், ஊர்வலம் செல்லும் பாதைகளில் உள்ள முக்கிய சந்திப்புகள் ஊர்வலம் தடையில்லாமல் விரைவாக செல்லவும், நிகழ்ச்சியின்போது எவ்வித அசம்பாவிதமும் நடைபெறா வண்ணம் நிகழ்ச்சியை நடத்திட பாதுகாப்பு முன்னேற்பாடுகள் பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில், திருச்சி மாநகர காவல் ஆணையர் பேசுகையில்….., விநாயகர் ஊர்வலத்தில் கொண்டு வரப்படும் சிலைகள் 10அடிக்கு மேல் இருக்கக்கூடாது. அரசியல் கட்சிகள் மற்றும் ஜாதி தொடர்பான பேனர்கள் வைக்கக்கூடாது. விழா நடைபெறும் இடத்தில் ஒலிபெருக்கி காலை, மாலை ஆகிய நேரங்களில் 2 மணி நேரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும், ஊர்வலத்தின்போது பட்டாசு வெடிக்க கூடாது, சிலைகளை மாட்டுவண்டி, மீன்பாடி வண்டி, மூன்று சக்கர வாகனங்களில் எடுத்து வரக்கூடாது, சிலை ஊர்வலம் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே செல்ல வேண்டும், புதிய வழிதடத்தில் செல்லக்கூடாது, சிலை வைக்கப்படும் இடத்தின் உரிமையாளர் மற்றும் சம்மந்தப்பட்ட அரசுதுறை அதிகாரிகளிடம் தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும், ஊர்வலத்தின்போது எவ்வித கோஷம் போட அனுமதிக்க கூடாது, சிலை கரைக்கும்போது தேவையற்ற பொருள்களை சிலையுடன் சேர்த்து கரைக்ககூடாது, சிலையை கரைந்தபின் வாகனத்தின் மேற்கூரையில் அமர்ந்து யாரும் பயணிக்க கூடாது, ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் மற்றும் நிர்வாகிகள் யாரும் மது அருந்திவிட்டு வரக்கூடாது, விநாயகர் சிலை நிறுவுவதற்கும் மற்றும் கரைப்பதற்கும் தமிழக அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதலின்படி எவ்வித அசம்பாவிதங்கள் நடைபெறவண்ணம் நிகழ்ச்சி நடைபெற விழா நிர்வாகிகள் காவல்துறையினருக்கு மிகுந்த ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வது தொடர்பான நெறிமுறைகளும், வழிகாட்டுதலும் பற்றி தெரிவிக்கப்பட்டது. அப்போது ஹிந்து முன்னணி நிர்வாகி போஜராஜன் பேசிய போது…. விநாயகர் சதுர்த்தியின் போது பிரதிஷ்டை செய்யப்படும். விநாயகரை திருமேனி என்று தான் குறிப்பிட வேண்டும். மேலும், மின் இணைப்பு பந்தல் அமைத்தல் ஒலிபெருக்கி அமைத்தல் போன்றவற்றை குறிப்பிட்டு மட்டுமே போலீஸ் அனுமதி கேட்கப்படும். திருமேனி வைத்து வழிபடுவது இந்துக்களின் வழிபாட்டு உரிமை. எனவே அதற்கு அனுமதி போலீஸிடம் கேட்க முடியாது, என்று தெரிவித்தார்.

அதை போலீஸ் அதிகாரிகள் தரப்பில் ஏற்றுக் கொள்ளாததால் ஹிந்து முன்னணியினர் கூட்டத்தில் இருந்து எழுந்து சென்று விட்டனர்.இக்கூட்டத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வது தொடர்பான நெறிமுறைகளும், வழிகாட்டுதலும் பற்றி தெரிவிக்கப்பட்டது. அப்போது ஹிந்து முன்னணி நிர்வாகி போஜராஜன் பேசிய போது…. விநாயகர் சதுர்த்தியின் போது பிரதிஷ்டை செய்யப்படும். விநாயகரை திருமேனி என்று தான் குறிப்பிட வேண்டும். மேலும், மின் இணைப்பு பந்தல் அமைத்தல் ஒலிபெருக்கி அமைத்தல் போன்றவற்றை குறிப்பிட்டு மட்டுமே போலீஸ் அனுமதி கேட்கப்படும். திருமேனி வைத்து வழிபடுவது இந்துக்களின் வழிபாட்டு உரிமை. எனவே அதற்கு அனுமதி போலீஸிடம் கேட்க முடியாது, என்று தெரிவித்தார். அதை போலீஸ் அதிகாரிகள் தரப்பில் ஏற்றுக் கொள்ளாததால் ஹிந்து முன்னணியினர் கூட்டத்தில் இருந்து எழுந்து சென்று விட்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *