சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் திட்டம் -1 உறையூர் பகுதிக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கான அடுப்பில்லா சமையல் போட்டி இன்று (13.09.2023) தென்னூர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இப்போட்டியை திருச்சி மாவட்ட உணவு நியமன அலுவலர் ரமேஷ் தலைமையேற்று தொடங்கி வைத்தார்கள். மாவட்ட சமூக நல அலுவலர் நித்யா அவர்கள் முன்னிலை வகித்தார். மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் காஞ்சனா வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சர்குணம், திருச்சி நகர சரக வட்டார கல்வி அலுவலர்கள் ஜோசப் அந்தோணி, அர்ஜுன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஊட்டச்சத்து வார விழாவின் ஒரு பகுதியாக இன்று நடைபெற்ற போட்டியில் பள்ளி மாணவர்கள் அடுப்பில்லாமல் தங்கள் கைவண்ணத்தில் பல்வேறு வித சமையல் செய்து அசத்தினார். மேலும் அதை அலங்கரித்து மிகவும் நேர்த்தியாக அமைத்து இருந்தனர். இதில் நடுவர் குழு உணவின் தரத்தை சோதித்தனர். புனித மேரிஸ் தோப் நடுநிலைப்பள்ளி முதல் பரிசாக ரூபாய் 2000/- பரிசு பெற்றது.
மாநகராட்சி நடுநிலைப்பள்ளி பீமநகர் பள்ளி இரண்டாம் பரிசையும் ரூபாய் 1000, சுப்பையா நடுநிலைப் பள்ளி மூன்றாம் பரிசு ரூபாய் 500 பெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உறையூர் திட்டம் 1 பகுதி அங்கன்வாடி மையப் பணியாளர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பள்ளிக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments