பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, தொடர்ந்து கலைஞர் அறிவாலயத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்னர் செய்தியாளருக்கு பேட்டியளித்த அவர்….. மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்களுக்கு மூன்று மாதம் அவகாசம் கொடுத்து இருக்கிறார்கள். யார் யாரெல்லாம் தகுதி பெற்று இருக்கிறார்களோ அவர்களை மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு சேர்க்கப்படுவார்கள்.
மணல் குவாரியில் அமலாக்கத்துறை சோதனை குறித்து கேட்டதற்கு பதில் ஏதும் கூறவில்லை. தினமும் தான் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. திராவிட முன்னேற்றக் கழகம் தளபதி ஸ்டாலின் அவர்களுடைய தலைமையில் எத்தனை ஆண்டு காலம் ஆனாலும் அவரை முதலமைச்சராக இருக்க வேண்டும் என மயிலாடுதுறை கோவிலில் சாமி தரிசனம் செய்தேன் என்றார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments