தமிழ்நாடு அரசால் நேற்று மகளிர் உரிமைத் தொகை திட்டம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திருச்சியில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2100 பயனாளிகளுக்கு நேரடியாக அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியர் அதிகாரிகள் வங்கி பணம் எடுப்பதற்கான டெபிட் கார்டு வழங்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (16.09.2023) திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் திடீரென நூற்றுக்கணக்கானோர் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் பெற வேண்டி கூடிவிட்டனர். அவர்கள் தங்களுக்கு கைபேசியில் குறுஞ்செய்தி வந்தும் ஆயிரம் ரூபாய் கிடைக்கவில்லை என்று நேரடியாக வங்கிக்கு படை எடுத்தனர்.
நேரில் வந்து வங்கி மேலாளரிடம் கேட்கும் பொழுது ஒரு கட்டத்தில் கூட்டம் அதிகமானதால் வாக்குவாதம் ஏற்பட்டு வங்கியின் பிரதான வாயில் கதவு மூடப்பட்டது. பின்பு வங்கியின் வாயிலில் காத்திருந்தவர்களிடம் இந்தியன் வங்கி கிளையின் வங்கி ஊழியர் தங்களது கணக்கில் வர வைக்கப்பட்டுள்ளது என்பதை சோதித்து தகவல் அளித்தார்.
மேலும் தாங்கள் வீட்டில் சிறு குழந்தைகளை விட்டுவிட்டு வங்கிக்கு வந்தால் அவர்கள் எங்களை அவமரியாதை உடன் நடத்துவதாக குறிப்பிட்டனர். வயதானவர்களும் நீண்ட நேரம் வந்து காத்திருந்தால் இதனால் சிறிது நேரம் வங்கியின் வாசலில் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தை சமாளிக்க முடியாமல் வங்கி ஊழியர்கள் திணறி தவித்தனர்.
ஒரு சில பெண்கள் தங்களுக்கு வேறு வங்கிகளில் வேறு வங்கி கணக்கில் 1000ரூ வரவு வைக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு ஏற்கனவே இருக்கும் வங்கிகளுக்கான ஆவணங்களை கொடுத்து தற்பொழுது ஆவணங்கள் இல்லாத வங்கி கணக்கில் வர வைக்கப்பட்டுள்ளதால் ஏமாற்றத்துடன் புலம்பி கொண்டே சிலர் திரும்பி சென்றனர்.
Comments