திருச்சி திருவரம்பூர் பிரகாஷ் நகர் விஸ்தரிப்பு அகரம் நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி பிரதான சாலை குடியிருப்பு பகுதியில் உள்ள மக்களின் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் அந்த பகுதியில் சாக்கடை நீர் தேங்கி இருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
பல முறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுகக்கவில்லை. மேலும் திருச்சி மாநகரில் காலி மனைகளில் முச்சடிகள் மற்றும் சாக்கடை மழை நீர் தேங்கி நிற்க கூடாது அவற்றை உடனடியாக அந்த இடத்தின் உரிமையாளர்கள் அப்புறப்படுத்த வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது. மேலும் தற்பொழுது தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், திருச்சி மாநகர் உள்ள 65 வார்டுகளில் வீடு வீடாக சென்று டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்ட வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்சி மாநகரில் பெரும்பாலான பகுதிகளில் உள்ள காலி இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதில் கொசு உற்பத்தி அதிகமாகி பொதுமக்களை அச்சுறுத்துகின்றன. இந்த சூழ்நிலையில் திருச்சி மாநகராட்சி பகுதிகளில் உள்ள காலி மனைகளை கண்டறிந்து
அவற்றின் உரிமையார்கள் மீது அபராதம் விதித்து தேங்கி இருக்கக்கூடிய நீரை வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் சிறப்பு குழு அமைத்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments