திருச்சி மாநகர ஸ்ரீரங்கம் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த செந்தில்குமார் பதவி உயர்வு பெற்று மாநகர காவல் நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக பணிபுரிந்து வந்தார்.
தற்பொழுது திருச்சி மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் செந்தில் குமார் குளித்தலைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு, குளித்தலை காவல் சரக துணை கண்காணிப்பாளர் ஸ்ரீதர் திருச்சி மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே திருச்சி மாநகர காவல் ஆணையராக பணியாற்றிய சத்ய பிரியாவிற்கும், உதவி ஆணையர் செந்தில்குமாருக்கும் இடையே சிறு மோதல் இருந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் சத்ய பிரியா சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அதனை தொடர்ந்து தற்பொழுது மாநகர நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையர் செந்தில்குமார் குளித்தலை காவல் சரகத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments