திருச்சிராப்பள்ளி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட M.R பாளையம் காப்பு காட்டில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில் சட்ட விரோதமாக வைத்திருந்த தனியார் யானைகளும், மற்றும் உரிய பராமரிப்பு இல்லாத கோயில் யானைகளையும்
உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்றம் உத்தரவின் பெயரில் தலைமை வன உயிரின பாதுகாப்பு அவர்களின் ஆணைக்கிணங்க யானைகள் மறுவாழ்வு மையத்தில் கொண்டுவரப்பட்டு சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று (18.09.2023) விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு மண்டல தலைமை வன பாதுகாவலர் N. சதீஷ் மற்றும் மாவட்ட வன அலுவலர் G.கிரண் அறிவுரையின்படி உதவி வன பாதுகாவலர் சம்பத் குமார், S.சரவணகுமார் தலைமையில் வனச்சரக அலுவலர்கள் V.P.சுப்பிரமணியம், கிருஷ்ணன் மற்றும் வன பணியாளர்களுடன்
எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் யானைகளுக்கு பிடித்த உணவுகளான பொங்கல், சுண்டல், கொழுக்கட்டை, கரும்பு மற்றும் தர்பூசணி, அன்னாசி, முலாம்பழம் உள்ளிட்ட பழ வகைகள் படைக்கப்பட்டு வழிபாடு செய்து விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments