திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சியில் கடந்த 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 19ஆம் தேதி அன்று இந்து முன்னணி சார்பில் வி.எச்.பி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது.
அப்போது துவரங்குறிச்சி பேருந்து நிலையம் முன்பாக மேடை அமைத்து அதில் இந்து முன்னணி மற்றும் வி.எச்.பி, பி.ஜே.பி.நிர்வாகிகள் கலந்து கொண்டு உரையாற்றினர். அப்போது இந்து முன்னணி திருச்சி மாவட்ட பொறுப்பாளர் தண்டபாணி பேசுகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 50 கோடி ரூபாய் தருகிறேன் என்றும்,
அதையும் நான் பிச்சை எடுத்து தருவேன் என்றும் கூறியதால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து துவரங்குறிச்சி காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தண்டபாணியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments