உலக இருதயதினம் ஒவ்வொரு ஆண்டும் 29ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இருதய நோய்கள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 17 மில்லியன் இறப்புகளை ஏற்படுத்துகின்றன. உலகம் முழுவதும் இதய நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். இதயம் ஆரோக்கியமாக இருந்தால், நமது வாழ்கை ஆரோக்கியமாக அமையும்.
இருதயத்தை பேணிக்காப்பது அவசியம் என்ற நோக்கில் இதயம் காப்போம் என்ற மைய கருத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபயணம் இன்று காலை திருச்சியில் நடைபெற்றது.
உழவர் சந்தை மைதானத்தில் இருந்து தொடங்கிய இந்த விழிப்புணர்வு நடைப்பயணம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது. சுமார் 300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த பயிற்சி மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பேரணியாகச் சென்றனர். முன்னதாக இந்த விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபயணத்தை மாநகராட்சி மேயர் அன்பழகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
Comments