திருச்சிராப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தூய வளனார் கலை கல்லூரி மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட புகாரை அடுத்து திருச்சிராப்பள்ளி உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். R. ரமேஷ்பாபு தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஸ்டாலின் பிரபு, செல்வராஜ், பாண்டி, ரெங்கநாதன், வடிவேல், மகாதேவன் மற்றும் குழு இன்று
அந்த கல்லூரியின் சையத் இப்ராஹீம் ஆகியோர் அடங்கிய உணவகத்தையும், கேண்டீனையும் ஆய்வு செய்ததில் அங்கு செயல்பட்டுவரும் கேண்டீன் மிகவும் அசுத்தமான முறையில் செயல்பட்டு அங்கிருந்த மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் வண்ணம் இருந்ததை அடுத்து அந்த கேண்டீனில் தற்காலிகமாக இன்று அதன் உணவு தயாரிப்பு தடைசெய்யப்பட்டுள்ளது.
மேலும் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அவர்கள் கூறுகையில்…. பள்ளி கல்லூரியில் சமைக்கப்படும் உணவு சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான முறையில் சமைக்கப்பட வேண்டும். அதன் சுற்றுச்சூழல் அசுத்தமான முறையில் இல்லாமல் பாதுகாத்துகொள்ள வேண்டும். மேலும் இதன் தொடர்சிசயாக மேல்வழக்கு பதிவு செய்வதற்காக, உணவகம் மற்றும் கேண்டீனிலிருந்து சட்டப்பூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், இதுபோன்று உணவு சம்மந்தப்பட்ட புகார்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம். புகார் அளிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும்.
உணவு கலப்பட புகாருக்கு : 99 44 95 95 95 / 95 85 95 95 95. மாநில புகார் எண் : 94 44 04 23 22
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments