Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி கோட்டத்தில் 61 ரயில்வே நிலையங்களில் அகற்றம் – கோட்ட மேலாளர் அன்பழகன் தகவல்

திருச்சி ரயில்வே கோட்டத்தின் சார்பில், காந்தி ஜெயந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகளுக்கு சான்றிதழ் வழங்கி ரயில்வே கோட்டை மேலாளர் அன்பழகன் பேசிய போது…. தூய்மையின் முக்கியத்துவத்தையும், பிரகாசமான எதிர்காலத்திற்கான விருப்பத்தையும் தொடும் ஒரு முக்கியமான விஷயத்தில் உங்கள் முன் உரையாற்ற இருக்கிறேன். 

“சுதந்திரத்தை விட சுகாதாரம் முக்கியம்” என்று மகாத்மா காந்தி கூறி இருக்கிறார். இதன் மூலம் அவர் தூய்மையான இந்தியாவைப் பற்றி எவ்வாறு கனவுகளைக் கொண்டிருந்தார் என்பது தெரிய வருகிறது. மகாத்மா பிறந்த தினமான காந்தி ஜெயந்தியை நினைவுகூரும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை நாடு முழுவதும் Swachhata pakhwadn அதாவது 15 நாட்கள் தூய்மை இயக்கத்தை 2016ல் தொடங்கி வைத்தார்.

நேற்றைய தினம், நமது பிரதமர் அனைவரையும் ஒரு மணி நேரம் தூய்மை பணியை மேற்கொள்ள உத்தரவு விட்டிருந்தார். அதன்படி நமது திருச்சிராப்பள்ளி கோட்டத்தில் 61 ரயில் நிலையங்களில் 150 இடங்களில், 4080 பணியாளர்கள் ஒரு மணி நேர தூய்மைப் பணியை மேற்கொண்டனர்.

தூய்மையான நீர், சுத்தமான உணவு, சுத்தமான ரயில்கள், ரயில் நிலையங்கள், தண்டவாளங்கள், அலுவலகங்கள், குடியிருப்புகள், பணிமனைகள், பராமரிப்பு பணிமனைகள் மற்றும் மருத்துவமனைகள். ரயில்வே வளாகங்கள் முழுவதும் உள்ளிட்ட தூய்மையை மேம்படுத்துவதற்காக நமது திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டம் பல்வேறு தூய்மை இயக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. ஒரு ரயில்வே பணியாளன் என்ற முறையில் இங்கு தெரிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். மேலும், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், வெபினார்கள். பல்வேறு போட்டிகள் ஆகியவற்றை கோட்டத்தில் நடத்தப்பட்டன.

15 நாட்கள் தூய்மை இயக்கத்தில் – திருச்சிராப்பள்ளி கோட்டத்தில். 26 உணவுக் கூடங்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் இருந்து 701 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், கோட்டம் முழுவதும் 1767 குப்பைத் தொட்டிகள் நிறுவப்பட்டன. இந்த இயக்கத்தின் மூலம் மொத்தம் 77,87,439 சதுர மீட்டர் பரப்பளவு சுத்தம் செய்யப்பட்டுள்ளது, அதுமட்டுமில்லாமல் 17.836 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. பசுமையை நோக்கிய பயணமாக கடந்த 15 நாட்களில் 3334 மரக்கன்றுகளை கோட்டம் முழுவதும் நடப்பட்டுள்ளது என்றார்.

தூய்மைப் பணியானது நீண்டகால மாற்றத்திற்கான ஒரு உந்துதல் என்பதால் நாம் அதை 15 நாட்களுக்கு மட்டும் இல்லாமல், நாள்தோறும் கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு செய்வது, சுத்தமான மற்றும் சுகாதாரமான வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கும்.

சுற்றுப்புறத்தை சுத்தம் செய்வது ஒவ்வொருவரின் பொறுப்பாகும். நமக்காகவும் வருங்கால சந்ததியினருக்காகவும் உலகைப் பாதுகாப்பாக மாற்ற நம்மையும் நமது சுற்றுச்சூழலையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருப்பது அவசியம் வேண்டுகோள் விடுத்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *