Saturday, August 16, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பிரபல தயாரிப்பாளர் காலமானார்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், ஆயுட்கால உறுப்பினரும், பிதாமகன், கஜேந்திரா, லூட்டி, லவ்லி, விவரமான ஆளு போன்ற மாபெரும் வெற்றிப்பட தயாரிப்பாளருமான வி.ஏ. துரை நேற்று இரவு காலமானார்.

எவர்கிரீன் மூவிஸ் இன்டர் நேஷனல் சார்பில், என்னம்மா கண்ணு, லுாட்டி, விவரமான ஆளு, லவ்லி, பிதாமகன், கஜேந்திரா ஆகிய படங்களை தயாரித்தவர் வி.ஏ. துரை. விஜயகாந்த் நடித்த கஜேந்திரா படத்தின் தோல்வியால், படம் தயாரிப்பதை அவர் நிறுத்தினார். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கும் பணம் இல்லாமல், வறுமையில் அவர் வாடினார். அவருக்கு சில நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உதவி செய்தனர்.

இந்நிலையில், உடல்நலக் குறைவால், துரை நேற்று மரணமடைந்தார். அவருடைய மறைவுக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், நடிகர்கள் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *