திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட பொத்த மேட்டுப்பட்டி பகுதிகளில் கடந்த சில தினங்களாக காவிரி குடிநீர் வழங்கப்படவில்லை எனவும், மேலும் உப்பு தண்ணீர் மோட்டார் பழுதடைந்துள்ளதாகவும், அதை சரி செய்யவில்லை எனக்கூறி அதிமுக நகர்மன்ற உறுப்பினர் அபி தலைமையில் பொதுமக்கள் காலி குடங்களுடன் பொத்த மேட்டுப்பட்டியில் சாலை மறியல் செய்ய முயற்சி செய்தனர்.
இதுப்பற்றி கவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை காவல்துறை ஆய்வாளர் கோபி, மணப்பாறை நகர்மன்ற தலைவர் கீதா மைக்கேல்ராஜ் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் கொடுக்க உரிய நடவடிக்கை.
எடுக்கப்படுவதாகவும், மேலும் உடனடியாக லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படும் என கூறியதை அடுத்து பொதுமக்கள் சாலை மறியல் முயற்சி கைவிட்டு கலைந்து சென்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்
அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments