Saturday, August 16, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

2000 ரூபாய் நோட்டை வைத்திருக்கிறீர்களா… இந்த 19 இடங்களில் நீங்கள் நோட்டுகளை மாற்றலாம் !!

2000 ரூபாய் நோட்டை வங்கியில் டெபாசிட் செய்ய அல்லது மாற்றுவதற்கான கடைசி தேதி போய்விட்டது இட்ஸ் கான் பட். இந்த நோட்டுகளை நீங்கள் வங்கியில் அக்டோபர் 7, 2023க்குள் டெபாசிட் செய்யதிருக்க வேண்டும் அல்லது மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். இதுபோன்ற சூழ்நிலையில், இந்த தேதி கடந்துவிட்டதே என்ன செய்வது, கவலையை விடுங்கள் இன்னும் இந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். இப்போது நீங்கள் யாரேனும் ஒருவர் ரூபாய் 2000 நோட்டுகளை மாற்ற விரும்பினால், அவர் ரிசர்வ் வங்கி அலுவலகத்திற்குச் சென்று மாற்றலாம்.

நீங்கள் ரூபாய் 2000த்தை மாற்றவோ அல்லது டெபாசிட் செய்யவோ விரும்பினால், அதற்கு நீங்கள் ரிசர்வ் வங்கி அலுவலகம் செல்ல வேண்டும். இந்தியாவில் உள்ள தங்கள் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் எந்த ஒரு நபரும் ரூபாய் 2000 நோட்டுகளை தபால் மூலம் அனுப்பலாம்.

இருப்பினும், இதற்கு, நீங்கள் தக்க காரணத்தைச்சொல்லி செல்லுபடியாகும் அடையாளத்தை வழங்க வேண்டும் மற்றும் RBI நிர்ணயித்த அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றக்கூடிய ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களின் பட்டியலை நீங்கள் கீழே காணுங்கள்… அலுவலகத்தின் முகவரி ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. எந்தவொரு மின்னஞ்சலையும் அனுப்பும் முன் இந்த முகவரிகள் மக்களின் சொந்தமாக சரிபார்த்துக்கொள்ளவும்.

அகமதாபாத் : இந்திய ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர், வெளியீடு துறை 2வது தளம், காந்தி பாலம் அருகில் அகமதாபாத் 380 014.

பெங்களூரு : அதிகாரி பொறுப்பாளர், நுகர்வோர் கல்வி மற்றும் பாதுகாப்பு பிரிவு, இந்திய ரிசர்வ் வங்கி 10/3/8, நிருப்துங்கா சாலை, பெங்களூரு-560 001, தொலைபேசி: 080- 22180397.

பேலாபூர் : இந்திய ரிசர்வ் வங்கியின் துணைப் பொது மேலாளர், வெளியீட்டுத் துறை பிளாட் எண். 3, பிரிவு 10, H.H. நிர்மலா தேவி மார்க், CBD, பேலாப்பூர், நவி மும்பை – 400 614.

போபால் : இந்திய ரிசர்வ் வங்கியின் துணைப் பொது மேலாளர், வெளியீட்டுத் துறை, ஹோஷங்காபாத் சாலை, அஞ்சல் பெட்டி எண். 32, போபால் 462 011.

புவனேஸ்வர் : இந்திய ரிசர்வ் வங்கியின் துணைப் பொது மேலாளர், வெளியீட்டுத் துறை Pt. ஜவஹர் லால் நேரு மார்க், அஞ்சல் பெட்டி எண். 16, புவனேஸ்வர் – 751 001.

சண்டிகர் : இந்திய ரிசர்வ் வங்கியின் துணைப் பொது மேலாளர், இஷ்யூ டிபார்ட்மெண்ட் சென்ட்ரல் விஸ்டா, டெலிபோன் பவன் எதிரில், செக்டார் 17, சண்டிகர் – 160 017.

சென்னை : இந்திய ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர், வெளியீட்டுத் துறை ஃபோர்ட் கிளாசிஸ் எண். 16, ராஜாஜி சாலை, அஞ்சல் பெட்டி எண். 40, சென்னை – 600 001.

கவுகாத்தி : இந்திய ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர், இஷ்யூ டிபார்ட்மெண்ட் ஸ்டேஷன் ரோடு, பான்பஜார், தபால் பெட்டி எண். 120, கவுகாத்தி – 781 001.

ஹைதராபாத் : இந்திய ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் வெளியீட்டுத் துறை 6-1-65, செயலக சாலை, சைபாபாத், ஹைதராபாத் – 500 004.

ஜெய்ப்பூர் : பொது மேலாளர், வெளியீட்டுத் துறை ரிசர்வ் வங்கி ராம்பாக் வட்டம், டோங்க் சாலை, அஞ்சல் பெட்டி எண்.12, ஜெய்ப்பூர் – 302 004.

ஜம்மு : இந்திய ரிசர்வ் வங்கியின் துணைப் பொது மேலாளர், வெளியீட்டுத் துறை ரயில் தலைமை வளாகம், ஜம்மு – 180 012.

கான்பூர் : இந்திய ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் வெளியீடு துறை எம்.ஜி. மார்க், அஞ்சல் பெட்டி எண். 82/142 கான்பூர் – 208001.

கொல்கத்தா : இந்திய ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் வெளியீட்டுத் துறை அஞ்சல் பெட்டி எண். 49 கொல்கத்தா – 700 001.

என்ன சந்தோஷம் தானே உடனே செலுங்கள் உரிய காரணத்தைக்கூறி மாற்றுங்கள் காசேதான் கடவுளடா !.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *