திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அகில இந்திய வ.உ.சி பேரவை (வெள்ளாளர் கூட்டமைப்பு) சார்பாக மாநிலத் தலைவர் லெட்சுமணம் தலைமையில் தமிழக முதல்வரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
Advertisement
தமிழக முதல்வர் ஏழு உட்பிரிவுகளை தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க பரிந்துரை செய்ததை கண்டித்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே விக்னேஷ் விடுதிக்கு முன்னதாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர் .அப்போது போலீசாருக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்பு கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். காவல்துறையினர் அவர்கள் அனைவரும் குண்டுகட்டாக தூக்கி இழுத்து நூற்றுக்கணக்கானரோரைகைது செய்தனர்.
பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்த கன்டோன்மென்ட் காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கைதான ஒருவர் மதுபான பாட்டிலை பெண் காவலர் ஒருவர் மீது வீசியதில் அவர் மீது பட்டு பாட்டில் உடைந்தது. .இதனால் மத்திய பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Advertisement
Comments